வானம் சுமக்கும் பறவைகள்
Uncategorizedபுத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்
₹200.00
எழுத்தாளர் பற்றி

“நிரல்யா”வின் இயற்பெயர் க. ஜெயமோகன்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை பூர்வீகமாகக் கொண்டவர்.
பள்ளிக் கல்வியை சங்கரன்கோவில் மற்றும் மதுரையிலும், சட்டப் படிப்பை சென்னை சவீதா சட்டக் கல்லூரியிலும் மேற்கொண்டவர். முதுகலை சட்டப் படிப்பை மெட்ராஸ் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் பயின்று வருகிறார்.
2017 ல், தனது சட்டப் படிப்பை முடித்தது முதல், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞர் தொழில் புரிந்து வருகிறார்.
வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது எண்ணங்களை அவ்வப்போது கவிதையாக படைத்து வருகிறார். “தனிமையின் மொழி கவிதை” (2015), “கவிஞர்கள் பாக்கியசாலிகள்” (2017) எனும் தலைப்புகளில், அவைகள் தொகுக்கப்பட்டு, மணிமேகலை பிரசுரத்தால் வெளியிடப்பட்டு, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.
2017க்குப்பிறகு அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு, “வானம் சுமக்கும் பறவைகள்” எனும் தலைப்பில் வரும் இந்த புத்தகம், கவிஞரின் மூன்றாவது படைப்பு ஆகும்.

ஜெயமோகன் (எ) நிரல்யா
கவிஞர்கள் பாக்கியசாலிகள்
₹200.00பேசத் தெரிந்தவன் பெரிய மனிதனாவான் எனும் நடைமொழிக்கேற்ப உற்று நோக்குகிறவன் கவிஞனாவதில் வியப்பொன்றும் இல்லை. தம்பி மோகன் தன் மனதின் விழிகளைக் கொண்டு வாழ்வின் தருணங்களைக் கவிதைகளாகப் படர்த்த விழைகிறார். அவரது ‘நீ’யும் ‘நானு’ம், வாசிக்கிற நாமும் கூட அமர்ந்து எழுந்து செல்லக்கூடிய இசை நாற்காலியின் குதூகல கணங்களாகவே மனம் வருடுகின்றன. எந்த விதத்திலும் சிடுக்கோ சிக்கலோ இல்லாத அன்பின் நேர் மொழிகள் இவை.
தனிமையின் மொழி கவிதை

இதிலிருக்கும் ஒவ்வொரு கவிதையும்
இதிலிருக்கும் எந்தப் பறவையும் எனக்கு இதற்கு முன்பு அறிமுகம் கிடையாது.
உணர்வுகளை மொழி சந்திக்கும் போதெல்லாம் என் அருகே ஒரு பறவை எங்கிருந்தோ வந்து அமர்கிறது.
இந்தப் பறவைகள் எங்கிருந்து வந்தது என்பதும் இன்னும் எதைநோக்கி பயணம் செய்யப் போகிறது என்பதும் எனக்கு மட்டுமில்லை இந்த பறவைகளுக்கே தெரியாது.
வானம் எப்பொழுதும் அழகாகத்தான் இருக்கிறது. அதுவும் அதில் உலகப் எல்லாம் இணைந்து பறக்க கண்டால் வானமே பறவைகளின் முதுகில் ஏறி சவாரி செய்வது போல் இருக்கிறது.
இந்தப் பறவைகளை எல்லாம் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதிலிருக்கும் சில பறவைகளை உங்களுக்கு பிடிக்கலாம் சில பறவைகளுக்கு உங்களை பிடிக்கலாம் அதோடு பேசுவது பழகுவதும் உங்கள் விருப்பம் ஆனால் இந்தப் பறவைகளின் பெயரையோ விலாசத்தையோ கண்டறிய முயற்சிக்காதீர்கள்.
வானம் சுமக்கும்பறவைகள்
– க. ஜெயமோகன்
(நிரல்யா)
எங்கள் தளத்தில் இணைந்திருங்கள்!
CONTACT
vkjeyamohan@gmail.com
FOLLOW ME